அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் (Monte Carlo Masters) போட்டியில் பங்கெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஃபேல் நடால் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த தகவலை போட்டியின் அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடால், அவுஸ்திரேலிய ஓபனுக்கான டிஃபென்ஸ் இரண்டாவது சுற்றில் மெக்கென்சி மெக்டொனால்டிடம் தோல்வியடைந்தார்.
அதிலிருந்து அவர் இடுப்பு வலி உபாதை காரணமாக போட்டிகளில் விளையாடவில்லை.
குறிப்பாக இம் மாதம் இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமியில் நடந்த டென்னிஸ் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.
இந் நிலையிலேயே 36 வயதான நடால், ஏப்ரல் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.