ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறினார் சாமரி

10 months ago
Cricket
(217 views)
aivarree.com

ஐ.சி.சி.யின் அண்மைய மகளிர் டி:20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் சாமரி அத்தபத்து முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.

இலங்கை மகளிர் அணி, பங்களாதேஷுக்கு எதிரான டி:20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த மூன்று இன்னிங்ஸுகளிலும் சாமரி அத்தபத்து மொத்தமாக 103 ஓட்டங்களை எடுத்தார்.

இதன் மூலம் 33 வயதான இடது கை துடுப்பாட்ட வீரர், தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்துக்கு வந்தார்.

இந்த தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரங்களான தஹ்லியா மெக்ராத் (முதல்), பெத் மூனி (இரண்டாவது) மற்றும் தலைவர் மெக் லானிங் (நான்காவது) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்திய நட்சத்திரமான மந்தனா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.