ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடுவர் ஜதின் காஷ்யப் மீது ஐசிசி குற்றச்சாட்டு

9 months ago
Cricket
(213 views)
aivarree.com

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக நடுவர் ஜதின் காஷ்யப் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) திங்களன்று குற்றம் சாட்டியுள்ளது.

2022 இல் நடந்த சர்வதேச போட்டிகள் தொடர்பான விசாரணையில் இந்த மீறல்கள் எழுந்ததாக ஐசிசி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழல் தடுப்புப் பிரிவின் (ACU) விசாரணையை மறுத்ததற்காகவும் தாமதப்படுத்தியதற்காகவும் ஜதின் காஷ்யப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது ஐசிசியின் விதி 2.4.6 மற்றும் 2.4.7 ஆகியவற்றின் மீறலாகும்.

குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க ஜதின் காஷ்யப்பிற்கு மே 19 முதல் 14 நாட்கள் ஐசிசி அவகாசம் அளித்துள்ளது.