உலக தடகள சம்மேளனம் ரஷ்யா மீதான தடையை நீக்கியது

2 years ago
Athletics
(705 views)
aivarree.com

உலக தடகள சம்மேளனம், ஊக்கமருந்துக்காக ரஷ்ய தடகள துறை மீதான தடையை நீக்கியுள்ளது. 

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகத்தின் அறிக்கை ஒன்றில்

இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரச அனுசரனையில் ரஷ்ய வீரர்களுக்கு ஊக்கமருந்து வழங்கியமை அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ரஷ்ய கூட்டமைப்பு (RusAF) 2015 இல் தடை செய்யப்பட்டது.

இந்த தடையை நீக்கிக் கொள்வதற்கு, உலக தடகள சம்மேளனம் ரஷ்யாவுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 

கொவிட் தொற்றுநோய் காரணமாக 2020 முதல் 2021 வரை ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு சில ரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

ஆனால் அவர்களால் நடுநிலைக் கொடியின் கீழ் அவ்வாறு பங்கேற்க முடிந்தது.

ஊக்கமருந்து காரணமாக ஏழு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்ட ரஷ்யா, மறுசீரமைப்பு திட்டத்தின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னர், சுயாதீன தணிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு தடை நீக்கப்பட்டுள்ளது.

மொனோக்கோவில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளின் முடிவெடுக்கும் பேரவையின் மூன்று நாள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது மொஸ்கோ படையெடுத்ததில் இருந்து அனைத்து ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்களும் தடை செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் ஊக்கமருந்து விவகாரத்தில் தடைகளை நீக்குவது உடனடி விளைவை ஏற்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.