உலக சாம்பியன்ஷிப்பில் சமித துலானுக்கு வெண்கலப் பதக்கம்

9 months ago
Athletics
(195 views)
aivarree.com

பிரான்ஸில் நடைபெறும் பரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர் சமித துலான் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

வியாழன் (13) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் F64 பிரிவின் இறுதிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் ஈட்டி எறிதலில் 64.06 மீட்டர் தூரம் செயல்திறனை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் சுமித் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அவுஸ்திரேலிய வீரர் புரியன் மைக்கேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.