உடற் கட்டமைப்பு வீரர்களுக்கு நுவரெலியாவில் பாராட்டு நிகழ்வு

8 months ago
Other Sports
(284 views)
aivarree.com

உடற் கட்டமைப்புத் துறையில் நுவரெலியா மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் புகழைக் கொண்டுவந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க தலைமையில் இந் நிகழ்வு நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது.

மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்ற வீரர்களுக்கும் நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பாராட்டு விழா இதுவாகும்.

ஜே.பி. உபுல், கயான் கனிஷ்க, கிறிஸ்டி கோம்ஸ், சங்கர் கணேஷ், சர்வதேச மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்ற வீரர் எரந்த புத்திக, சுபாஷ் பெத்மா ஆகியோருக்கு கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் சுரத்தின் பாராட்டுக் கிண்ணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, லிட்டில் இங்கிலாந்து பிரைவேட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் அநேரக உடற்கட்டமைப்பு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.