உலகின் வேகமான மனிதர் என்று கருதப்படும் முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் முதலீடுகளை முகாமை செய்கின்ற நிறுவனம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மோசடியால் அவர் மில்லியன் கணக்கான டொலர்களை இழந்திருக்கலாம் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜமைக்காவின் நிதிச் சேவைகள் ஆணையகம் (FSC) குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பங்குகள் மற்றும் பிணையங்கள் லிமிடெட் (SSL) என்ற நிறுவனத்தை அவதானத்தில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
36 வயதான ஓய்வு பெற்ற ஓட்டப்பந்தய வீரர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த நிறுவனத்துடன் முதலீடுகளை செய்துள்ளார்.
போல்ட்டின் முகாமையாளர் நூஜென்ட் வோக்கர் இதுதொடர்பான முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
11 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்கள் மற்றும் எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற பிறகு போல்ட் 2017 இல் தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போல்ட் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டத்தில் புதிய உலக சாதனைகளை படைத்தார்.
அவர் 9.572 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்தமையே தற்போதும் உலக சாதனையாக உள்ளது.