இலங்கை வெற்றி

2 years ago
Local Sports
(933 views)
aivarree.com

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அவுஸதிரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை அணி 37 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 52 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.