இலங்கை வந்தடைந்த அயர்லாந்து அணி

11 months ago
Cricket
(310 views)
aivarree.com

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்துள்ளது.

தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 16 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதியும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.

இந்த சுற்றுப்பயணமானது ஆரம்பத்தில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளை உள்ளடக்கியிருந்தது.

ஆனால் பின்னர் இரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் ஒருநாள் போட்டிகளைக் கைவிட்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இணக்கம் எட்டியது.

2017 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டதிலிருந்து அயர்லாந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது.

அந்த அனைத்து போட்டிகளிலும் அயர்லாந்து தோல்வியடைந்துள்ளது.

இலங்கையுடனான சுற்றுப் பயணத்தின் பின்னர் அயர்லாந்து எதிர்வரும் ஜூன் மாதம் லோர்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கெடுக்கும்.