இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 19
பாடசாலை மட்ட ரக்பி ஆட்டம் ஆரம்பம்

2 years ago
Local Sports
(910 views)
aivarree.com

வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சுப்பர் செவன்ஸ் ரக்பி உதைபந்தாட்டப் போட்டி இன்றும் நாளையும் (10 மற்றும் 11) கொழும்பு றோயல் கல்லூரி மைதானம் மற்றும் ஹெவ்லொக்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

08 பிரிவுகளின் கீழ் லீக் முறையில் ஆரம்ப சுற்று நடைபெறவுள்ளது.

இதில் போட்டியிடும் பாடசாலைகளின் எண்ணிக்கை 22 ஆகும்.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் பாடசாலைகள் பங்குபற்றுகின்றன.

கொழும்பு றோயல் கல்லூரி, சென் தோமஸ் கல்லூரி மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி ஆகியன இவ்வருடப் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.