இலங்கை கராத்தே-டூவின் பதிவு இடைநிறுத்தம்

11 months ago
Other Sports
(186 views)
aivarree.com

கராத்தே விளையாட்டுக்கான தேசிய சங்கமான இலங்கை கராத்தே-டூவின் பதிவை இடைநிறுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஹான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் பிரகாரம், குறித்த சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் பேணுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் 09 பேர் கொண்ட குழுவொன்றை தற்காலிக செயற்பாட்டு நடைமுறைக்காக நியமித்துள்ளார்.

சி.ஏ.ஜி.டி சொய்சா தலைமையில் இந்தக் குழுவின் செயலாளராக கலாநிதி ஜயலத் இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் அலுவலகப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கும் தேர்தல் நடத்துவதற்கும் தேர்தல் குழுவொன்றை நியமிக்கும் அதிகாரமும் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.