இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான ஆப்கான் அணி அறிவிப்பு

1 year ago
Cricket
(359 views)
aivarree.com

இலங்கையுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த இடது கை ஆட்டக்காரர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்துவார்.

ஜூன் 2 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பாகும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஒரு வலுவான 15 வீரர்கள் கொண்ட அணி மற்றும் நான்கு மேலதிக வீரர்களை தேர்வாளர்கள் திங்களன்று பெயரிட்டுள்ளனர்.

இளம் சகலதுறை வீரர் அப்துல் ரஹ்மான், இந்த அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஷாஹிதுல்லா கமால், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர் மற்றும் குல்பாடின் நைப் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண சூப்பர் லீக்கி தரவரிசையில் ஏழாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் ஆப்கானிஸ்தான் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இந்த தொடரானது, ஒக்டோபர் மற்றும் நவம்பரில் இந்தியாவில் இடம்பெறவுள்ள 2023 உலகக் கிண்ணத்துக்கு ஆயர்த்தமாக அமையும்.

ஆப்கானிஸ்தான் அணி:

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (தலைவர்), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹாசன், நஜிபுல்லா சத்ரன், மொஹமட் நபி, இக்ராம் அலிகைல், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜிப்புர் ரஹ்மான், நூர் அகமட், அப்துல் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபாரூக்கி மற்றும் ஃபரித் அகமட் மாலிக்.

மேலதிக வீரர்கள்

குல்பாடின் நைப், ஷாஹிதுல்லா கமால், யாமின் அகமட்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர்

போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி ; ஜூன் 2 – ஹம்பாந்தோட்டை
  • இரண்டாவது ஒருநாள் போட்டி ; ஜூன் 4 – ஹம்பாந்தோட்டை
  • மூன்றாவது ஒருநாள் போட்டி ; ஜூன் 7 – ஹம்பாந்தோட்டை