இலங்கையில் பதிவான புதிய 3 தேசிய மட்ட சாதனைகள்

11 months ago
Local Sports
(390 views)
aivarree.com

இலங்கை இராணுவத்தின் 58வது தடகள சம்பியன்ஷிப் போட்டி நேற்று (30) இரண்டாவது நாளாக தியகம சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது 3 புதிய தேசிய மட்ட சாதனைகளை படைக்கப்பட்டன.

ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கஜபா படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் லக்மால் பெர்னாண்டோ 45 நிமிடங்கள் 12.22 வினாடிகளில் கடந்து புதிய இலங்கை சாதனையை படைத்தார்.

இதேவேளை, 10,000 மீற்றர் பெண்களுக்கான நடைப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை மகளிர் படையின் லான்ஸ் கோப்ரல் கல்ஹரி மாதிரிகா புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்.

கல்ஹாரி மாதிரிகா 49 நிமிடங்கள் 25.97 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார்.

இராணுவ சேவைப் படையின் லான்ஸ் கோப்ரல் ஜனித், ஆண்களுக்கான கோல் வால்ட் போட்டியில் 5.16 மீற்றர் உயரத்தை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.