இந்திய ஓபன் பூப்பந்து | பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

1 year ago
Other Sports
(680 views)
aivarree.com

இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் நடந்த இந்திய ஓபன் பூப்பந்து போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறினார். 

எனினும் சகநாட்டவரான எச்.எஸ்.பிரணாய்க்கு எதிராக, நடப்பு சாம்பியனான லக்ஷ்யா சென் வெற்றிபெற்றார்.

முன்னாள் சாம்பியன் உலகின் 7ம் நிலை வீராங்கனையான சிந்து 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் உலகின் 30ம் நிலை வீராங்கனையான சுபனிடா கேத்தோங்கிடம் தோல்வியடைந்தார்.  

இந்தத் தொடரின் கடந்த ஆண்டு பதிப்பின் அரையிறுதியில் இதே வீரரிடம் சிந்து  தோல்வியடைந்திருந்தார்.