இந்தியாவின் நிரந்தர தலைவராகிறார் ஹர்டிக் பாண்டியா

1 year ago
Local Sports
(1016 views)
aivarree.com

நியுசிலாந்து அணிக்கு எதிரான 20க்கு20 போட்டித் தொடருக்கு தலைவராக செயற்படுகின்ற ஹார்டிக் பாண்டியாவே, இந்திய கிரிக்கட் அணிக்கு நிரந்தர தலைவராகவும் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் ஒன்றுகூடவுள்ள இந்திய கிரிக்கட் அணியின் தேர்வுக்குழு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

இந்திய இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள 20க்கு20 உலகக்கிண்ணத் தொடரை இலக்கு வைத்து இந்த மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.