இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 60 ஓட்டங்களால் தோற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கட்டுகளை இழந்து 50 ஓவர்களில் 294 ஓட்டங்களைப் பெற்றது.
வனிந்து ஹசரங்க 42 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பத்தும் நிஸ்ஸங்க 86 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசலாஹ் பாரூக் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும், குல்பாடின் நயிப் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக இப்ராஹிம் சட்ரான் தெரிவு செய்யப்பட்டார்.