ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் நதீஷா ராமநாயக்க

9 months ago
Athletics
(164 views)
aivarree.com

தாய்லாந்தின் பங்கொக்கில் நடைபெறும் 2023 ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

புதன் (12) அன்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலேயே அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

28 வயதான வீராங்கனை, 52.61 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதல் இடம் பிடித்தார்.

இந்த போட்டியில் உசுபெக்கிசுத்தான் வீராங்கனையான லைலோ அலபெர்கனோவா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஜப்பான் வீராங்கனையான நானாகோ மாட்சுமோட்டோ வெண்கலப் பதக்கம் வென்றார்.