ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் முதல் நாளில் இலங்கைக்கு இரு பதக்கங்கள்

9 months ago
Athletics
(170 views)
aivarree.com

25 ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணியால் இரண்டு பதக்கங்களை வெல்ல முடிந்தது.

அதன்படி, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் பந்தைய தூரத்தை 4:14:39 நிமிடங்களில் ஓடி முடித்தார்.

அதேநேரம் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நடிஷா தில்ஹானியும் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவர் 60.93 மீட்டர் செயல்திறனை வெளிப்படுத்தினார்.