ஆசியக் கிண்ணம்; இந்தியா – நேபாளம் மோதல் இன்று

6 months ago
Cricket
(112 views)
aivarree.com

2023 ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் இன்று நேபாளத்தை எதிர்கொள்கிறது.

அதன்படி, இந்த ஆட்டம் இன்று பிற்பகல் கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டமானது மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ஓட்டங்களை எடுத்த பிறகு, தொடர்ந்தும் பெய்த இடைவிடாத மழையால் ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டது.

இந் நிலையில் இன்று நேபாளத்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதனிடையே கண்டியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனவே மழை காரணமாக ஆட்டம் இரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படு தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.