அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (10) நியூயோர்க்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவை தோற்கடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
இது ஜோகோவிச் வெற்றி கொள்ளும் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
இதன் மூலம், டென்னிஸ் வரலாற்றில் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை அவர் உறுதிப்படுத்தினார்.