அஞ்சலோ மெத்தீவ்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பும் வாய்ப்பு

1 year ago
Cricket
(225 views)
aivarree.com

இலங்கை வந்துள்ள “இங்கிலாந்து லயன்ஸ்” அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை “ஏ” அணியில், அஞ்சலோ மெத்தீவ்ஸ், குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் அவர்கள் “ஏ” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்துக்கு எதிரான தொடரை இலக்கு வைத்து 11 வீரர்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, சாமிக கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லாலகே, சதீர சமரவிக்ரம, லக்‌ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், நுவன் துஷார, கவிஷ்க அஞ்சுல, அவிஷ்க பெர்னாண்டோ, துஸ்மந்த சமீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து லயன்ஸ்கு எதிராக 2, 4 நாட்கள் போட்டிகளிலும், 3, ஒருநாள் போட்டிகளிலும் இந்த அணி விளையாடவுள்ளது.