WTC 2023 இறுதிப் போட்டி ; இந்திய அணி தொடர்பான புதிய அப்டேட்

11 months ago
Cricket
(259 views)
aivarree.com

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மே 1 ஆம் திகதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக்கின் 43 வது போட்டியில் களத்தடுப்பு செய்யும் போது ராகுலுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது.

நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, ராகுலுக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்து, தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் அவர் விளையாடமாட்டார்.

அதேபோல் ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சு பயிற்சியின் போது இடறி வீழுந்ததால், அவரின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

ஒரு நிபுணரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவரது தோள்பட்டை காயம் மற்றும் மறுவாழ்வு அமர்வில் உள்ளார்.

WTC இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து பின்னர் ஒரு கட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

இதேவேளை ஏப்ரல் 26 அன்று ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக்கின் 36வது போட்டியின் போது உமேஷ் யாதவ் இடது தொடை தசையில் சிறு உபாதைக்கு உள்ளானர்.

வேகப்பந்து வீச்சாளர் தற்போது KKR மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார் மற்றும் அவரது மறுவாழ்வு செயல்முறையின் ஒரு பகுதியாக இலகுவான பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

BCCI மருத்துவக் குழு KKR மருத்துவக் குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது மற்றும் உமேஷின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இந் நிலையில் இந்திய கிரிக்கெட்டின் சிரேஷ்ட தேர்வுக்குழு கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷனை WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இணைத்துள்ளது என்று கூறியுள்ளது.

WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (தலைவர்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ.பாரத் (விக்கெட் காப்பாளர்), ரவீச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஸா, அக்ஸர் படேல், சர்துல் தாகூர், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷான்.

காத்திருப்பு வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.