நீர் மின் உற்திக்காக பயன்படுத்தும் மலையகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களின் ஒன்றான மவுசாக்கலை நீர்த்தேகத்தில் நேற்று (21) திகதிக்கு சுமார் 55 சதவீதம் வரை நீர் குறைந்துள்ளதாகவும் தற்போது 45.4. சதவீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் மின்சார சபை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நீர்த்தேக்கத்தில் நீர் தாழிறங்கியதன் காரணமாக நீர் மூழ்கி கிடந்த கதிரேசன் ஆலயம்,விகாரை, புத்தர்சிலை, பள்ளிவாசல் மஸ்கெலியா பழைய நகரம் உள்ளிட்ட பல கட்டடங்கள்,மற்றும் பாலங்கள் வீதிகள் ஆகியன தென்பட ஆரம்பித்துள்ளன.