SLvIRE 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவு | இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க அயர்லாந்துக்கு இன்னும் 158 ஓட்டங்கள்

12 months ago
Cricket
(246 views)
aivarree.com

இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

நான்காம் நாள் ஆட்ட நிறைவின் போது, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 492 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 704 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டத்தை டிக்ளே செய்தது.

முதல் இன்னிங்ஸின் முடிவுகளின்படி இலங்கை 212 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் அயர்லாந்து 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு அயர்லாந்துக்கு இன்னும் 158 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது.

நாளை போட்டியின் இறுதி நாளாகும்.