LPL தொடரை கைப்பற்றி ஹெட்ரிக் அடித்தது ஜஃப்னா கிங்ஸ்

1 year ago
Cricket
(632 views)
aivarree.com

2022 LPL தொடரையும் ஜஃப்னா கிங்ஸ் வென்றது. 

தொடரின் இறுதிபோட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 2 விக்கெட்டுகளால் வென்று ஜஃப்னா கிங்ஸ்  சம்பியனாக முடிசூடியது.

முதலில் துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 5 விக்கட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. 

தினேஷ் சந்திமால் 49 ஓட்டங்களையும், ரவி போபாரா 47* ஓட்டங்களையும் பெற்றனர். 

துனித் வெல்லாலகே 18 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை கைப்பற்றினார். 

பதிலளித்தாடிய ஜஃப்னா கிங்ஸ் 8 விக்கட்டுகளை இழந்து 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. 

அவிஷ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 44 ஓட்டங்களையும் பெற்றனர். 

சுரங்க லக்மல் 23 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். 

அடுத்தடுத்து 3 LPL தொடர்களை ஜஃப்னா கிங்ஸ் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.