INDvsNZ ODI | 108க்கு சுருண்டது நியூசிலாந்து

8 months ago
Cricket
(147 views)
aivarree.com

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்சமயம் ராய்ப்பூரில் இடம்பெறுகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். 

அதன்படி முதலில் துப்பாடிய நியூசிலாந்து 34.3 ஓவர்களில் 108 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

இந்தியாவின் மொஹமட் ஷமி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். 

ஹார்டிக் பாண்டியா மற்றும் வொசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணி 109 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட ஆரம்பிக்கிறது.