41 வருடங்களின் பின் இந்திய கரப்பந்தாட்ட அணி இலங்கை வருகை

1 year ago
Other Sports
(563 views)
aivarree.com

நாட்டின் கரப்பந்தாட்ட வரலாற்றில் புதிய மைல்கல்லாக 41 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய கரப்பந்தாட்ட அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.

அதன்படி இந்திய இள‍ையோர் ஆடவர் கரப்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக மாநில அணி இன்று பகல் நாட்டை வந்தடைந்துள்ளது.

33 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு கரப்பந்தாட்ட அணியொன்று கரப்பந்தாட்ட கோட்டிகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளமையால் இந்த சுற்றுப்பயணம் நாட்டுக்கு தனித்துவமானது.

கடந்த 1990 ஆம் ஆண்டு சோவியத் குடியரசின் உக்ரைன் அணி கரப்பந்தாட்ட போட்டிக்காக இலங்கை வந்தது.

அதேபோல் இந்திய தேசிய அணி 1982 இல் இலங்கை கரப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்றது. 1954 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய கரப்பந்தாட்ட அணி இலங்கைக்கு வந்தது.

இந்நிலையில் இந்திய சென்னை மருத்துவக் கல்லூரி அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம், இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை வந்தடைந்த இவர்களை விமான நிலையத்தில் வைத்து இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர்.

சம்மேளனத்தின் தலைவர் கஞ்சன ஜயரத்ன, செயலாளர் ஏ.எஸ். திரு.நாலக, உபதலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மகேஷ் அபயரத்ன மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பரியந்த ஜயக்கொடி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய இளையோர் கரப்பந்தாட்ட அணி விபரம்