Tamil Sports News

27 ஆவது லாலிக்கா பட்டத்தை வென்றது பார்சிலோனா

27 ஆவது லாலிக்கா பட்டத்தை வென்ற பார்சிலோனா

பார்சிலோனா தனது 27 ஆவது லாலிக்கா பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக வென்றுள்ளது.

லாலிக்கா தொடரின் இறுதிப் போட்டி பார்சிலோனா மற்றும் எஸ்பான்யோல் ஆகிய அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெய்னின் Cornellaa-El Prat மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் பார்சிலோனா நகர போட்டியாளர்களான எஸ்பான்யோலுக்கு எதிராக 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 27 ஆவது லா லிகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

அதிலும் மெஸ்ஸி இல்லாமல் முதல் முறையாக பார்சிலோனா சாம்பியன் ஆனமை விசேட அம்சமாகும்.

கழக ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் பார்சிலோனாவிலிருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Exit mobile version