2026 உலகக்கிண்ணத்தில் விளையாடுவதா? | மெஸ்ஸி சொன்ன பதில்

2 months ago
Football
(80 views)
aivarree.com

2026 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் விளையாடுவது, வயது காரணமாக கடினமாக இருக்கும் என்று ஆர்ஜன்டீன வீரர் லியோனால் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘2026 உலகக்கிண்ணத்துக்கு இன்னும் நீண்டகாலம் இருக்கிறது.

எனது வயது காரணமாக அதில் விளையாடுவது கடினமாக இருக்கும்.

ஆனால் நான் நல்ல உடல்நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.

கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதை நான் இரசிக்கிறேன்.

எனவே தொடர்ந்து விளையாடுவேன்.

ஆனால் 2026 உலக்கிண்ணத் தொடரில் விளையாடுவேனா? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது’ என அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் கால்பந்து வாழ்க்கை முடிவடைந்த பின்னர் பார்சிலோனாவில் வசிப்பதையே தாம் விரும்புவதாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

பார்சிலோனா கழகத்துக்காக மெஸ்ஸி தமது ஆரம்பகாலத்தில் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி, தற்போது, PSG உடன் ஒப்பந்தம் செய்துள்ளார், அது அவரை இந்த சீசன் இறுதி வரை கிளப்பில் வைத்திருக்கும். நீட்டிப்பு பற்றிய வதந்திகள் வெளிவந்துள்ளன, ஆனால் இதுவரை உறுதியான எதுவும் உருவாகவில்லை.