2023 LPL தொடருக்கான திகதி அறிவிப்பு

1 year ago
Cricket
(382 views)
aivarree.com

நான்காவது லங்கா பிரீமியர் லீக் (LPL) டி:20 தொடரானது எதிர்வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்கும்.

போட்டிகள் மூன்று சர்வதேச மைதானங்களில் விளையாடப்படும்.

லங்கா பிரீமியர் லீக் என்பது இலங்கையின் சிறந்த உள்நாட்டு டி:20 கிரிக்கெட் போட்டியாகும்.

இப் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 14 உள்ளூர் வீரர்கள் மற்றும் ஆறு வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 20 வீரர்கள் இடம்பெறுவார்கள்.