2023 உலகக் கிண்ண போட்டிகளை பங்களாதேசில் விளையாடவுள்ள பாகிஸ்தான்?

6 months ago
Cricket
(176 views)
aivarree.com

2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ண தொடரில், பாகிஸ்தான் தனது போட்டிகளை பங்களாதேசில் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்தியா இம்முறை உலகக் கிண்ண போட்டித் தொடரை நடத்துகிறது.

ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிணக்குகளால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் போட்டிகளை பங்களாதேசில் நடத்த சர்வதேச கிரிக்கட் பேரவை மட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

ஆசியக் கிண்ண தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா தமது போட்டிகளை வேறொரு நாட்டில் விளையாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன்படியே உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானின் போட்டிகளை பங்களாதேசில் நடத்த ஆராயப்படுகிறது.

ஆனால் இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.