2019க்கு பின்னர் பட்டம் வென்றார் ஆண்டி மரே

5 months ago
Tennis
(252 views)
aivarree.com

Aix-en-Provence இல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏடிபி செலஞ்சர் சுற்றின் இறுதிப் போட்டியில் ஆண்டி மரே, டோமி போலை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சுமார் நான்கு வருடங்களின் பின்னர் அவர் வெல்லும் முதல் சம்பியன் பட்டம் இதுவாகும்.

35 வயதான பிரிட்டன் வீரர் மரே, அமெரிக்க முதல் நிலை வீரரான போலுக்கு எதிராக 2-6 6-1 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2019 ஐரோப்பிய ஓபன் பட்டத்தை வென்ற பின்னர் முர்ரே பெறும் முதல் பட்டம் இதுவாகும்.

முன்னதாக இவர் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.