2ஆம் டெஸ்ட் | பங்களாதேஸை சுருட்டிய இந்தியா

1 year ago
Cricket
(475 views)
aivarree.com

டாக்காவின் ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் நடந்து வரும் இந்திய – பங்களாதேஸ் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. 

இந்திய அணி விக்கட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியன் மூலம், இந்தியா, பங்களாதேஸை 227 ஓட்டங்களுக்குள் சுருட்டியது. 

பங்களாதேஷ் அணியில் மொமினுல் ஹக் 84 ஓட்டங்களை குவித்து அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

அஷ்வின் மற்றும் யாதவ் தவிர இந்திய தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

முன்னதாக, நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் தலைவர் ஷகிப் அல் ஹசன், இந்தியாவுக்கு எதிராக முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.  

பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 188 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.