131 பந்துகளில் 401 ஓட்டங்கள் | 13 வயது சிறுவனின் சாதனை

1 year ago
Cricket
(537 views)
aivarree.com

இந்தியாவின் கல்லூரி கிரிக்கட் கழகங்களுக்கு இடையிலான போட்டியொன்றில் தன்மொய் சிங் என்ற 13 வயது சிறுவன், 132 பந்துகளில் 401 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நொய்டாவில் உள்ள தேவராஜ் விளையாட்டு கழகம் மற்றும் ரயான் சர்வதேச பாடசாலை கிரிக்கட் கழகம் என்பவற்றுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி நடைபெற்றது.

இதில் ரயான் கல்லூரி அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.

தேவராஜ் விளையாட்டுக் கழகம் சார்பில் களமிறங்கிய தன்மோய் சிங், 132 பந்துகளில் 38 சிக்சர்கள், 30 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 401 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்படி அவர் 226 ஓட்டங்களை ஆறு ஓட்டங்கள் மூலமாகவும், 120 ஓட்டங்களை நான்கு ஓட்டங்கள் மூலமாகவும் பெற்றுள்ளார்.

தேவராஜ் விளையாட்டுக் கழகம் மொத்தமாக 656 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய ரயான் கல்லூரி அணி 193 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது.