டிரேட் சர்வீஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஜனிது லக்விஜய 110 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் புதிய இலங்கை சாதனையைப் படைத்துள்ளார்.
போட்டியை அவர் 13.82 வினாடிகளில் முடித்தார்.
எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்காக தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற போட்டி நிகழ்வில் ஜனிது லக்விஜய அந்தச் சாதனையை நிலைநாட்டினார்.
அங்கு சிறுமிகளுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வளவே ரத்நாயக்க கல்லூரியைச் சேர்ந்த தருஷி ரத்நாயக்க புதிய கனிஷ்ட தேசிய சாதனையைப் படைத்தார்.
இந்த போட்டியை அவர் 2 நிமிடம் 1 நொடி மற்றும் 39 விநாடிகளில் முடித்தார்.