விராட் கோலி இன்று படைத்த சாதனைகள் | சச்சின், மஹெலவின் சாதனைகள் முறியடிப்பு

1 year ago
Cricket
(325 views)
aivarree.com

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தமது 46ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த தொடரில் அவர் பெறும் இரண்டாவது சதம் இதுவாகும்.

இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.

ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிககூடிய சதங்கள் என்ற சாதனையை இலங்கைக்கு எதிராக 10 சதங்களை அடித்ததன் மூலம் கடந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்களை பெற்றிருப்பதுடன், கோலி ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் 9 சதங்களைப் பெற்றுள்ளார்.

அதேநேரம் இந்திய மண்ணில் அதிகூடிய சதங்களை அடித்த வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்து, சச்சின் டெண்டுல்களின் 20 சதங்களைக் கடந்து இன்று 21ஆவது சதத்தை சொந்த மண்ணில் படைத்தார்.

அத்துடன் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

இதேவேளை இன்றைய போட்டியில் 62 ஓட்டங்களைப் பெற்ற போது, ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஒட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் மஹெல ஜெயவர்தனவை பின்தள்ளி ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மஹெல ஜெயவர்தன 12,650 ஒருநாள் ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதுவரையில் கோலி 46 ஒருநாள் சதங்களையும், 27 டெஸ்ட் சதங்களையும், ஒரு 20க்கு20 போட்டி சதத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.