ரொனால்டோ ஐரோப்பாவுக்கு திரும்புவார் | அல்-நஸ்ர் முகாமையாளர் ரூடி

1 year ago
Football
(260 views)
aivarree.com

கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘அல் நஸ்ர் கழகத்தில் தனது வாழ்க்கையை முடிக்க மாட்டார் எனறும் அவர் ஐரோப்பாவுக்குத் திரும்புவார் என்றும் அல் நாஸ்ரின் முகாமையாளர் ரூடி கார்சயா தெரிவுத்துள்ளார்.

அல் நஸ்ர் கழகத்துக்காக விளையாடும் ரொனால்டோ தொடர்ந்து இரண்டு போட்டிகளில் கோல் ஏதும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரூடி இதனைக் கூறியுள்ளார்.

சவுதி சூப்பர் கப் அரையிறுதியில், கடந்த வாரம் அல் இட்டிஹாட் இடம் தோற்றதில், அல்-நஸ்ர் வெளியேற்றப்பட்டது.

ரொனால்டோ கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டார்.

37 வயதான போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் ரொனால்டா, சவுதிக்கு சென்றதில் இருந்து இதுவரை கோல் அடிக்கவில்லை.

எனினும் “கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிக்கு நேர்மறையான சக்தி, ஏனெனில் அவர் எதிரணியின் டிஃபென்ஸ்களை சிதறடிக்க உதவுகிறார்” என்று ரூடி கார்சியா கூறினார்.

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மென்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து வெளியேறி, அல் நஸ்ர் உடன் இணைந்த ரொனால்டோ, சவுதி சூப்பர் கப்பில் அல் இட்டிஹாடுக்கு எதிராக ஒரு கோலை தவறவிட்டதற்காக பயிற்சியாளர் விமர்சித்தார்.

“ரொனால்டோ கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டமை, ஆட்டத்தை மாற்றியிருந்தது, ஆனால் நான் அல் இட்டிஹாட்டை வாழ்த்துகிறேன்,” என்று கார்சியா கூறுகிறார்.

அதேநேரம், “ரொனால்டோ உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் அல் நஸ்ரில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள மாட்டார், அவர் ஐரோப்பாவுக்குத் திரும்புவார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரொனால்டோவுக்கு பந்தை பாஸ் செய்யும் போது அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் மத்தியில் ரொனால்டோ இருப்பதைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் கார்சியா தனது வீரர்களை வலியுறுத்தினார்.

“வீரர்கள் சாதாரணமாக விளையாடுவது மிகவும் முக்கியம், எப்போதும் கிறிஸ்டியானோவுக்கு பந்தைக் கொடுக்க முயற்சிக்க கூடாது. களத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் – என்று அணி வீரர்களிடம் கூறினேன். வெளிப்படையாக, கிறிஸ்டியானோ அல்லது தாலிஸ்கா தனியாக இருக்கும்போது பந்தை கேட்கும்போது மட்டும் வீரர்கள் அவர்களுக்கு பந்தை பாஸ் செய்ய வேண்டும், ”என்றும் ரூடி கூறினார்.