மார்னஸ் லபுஸ்ச்சேன்ஜ் தொடர்ந்தும் முதலிடம்

1 year ago
Cricket
(430 views)
aivarree.com

சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ச்சேன்ஜ் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
ஸ்டீவ் சுமித் 2ம் இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் வீரர் ஜோ ரூட் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பாபர் அசாம் மற்றும் ட்ரெவிஸ் ஹெட் ஆகியோர் தலா ஒவ்வொரு இடங்கள் பின்னடைவைச் சந்தித்து முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளனர்.

இரண்டு இடங்கள் முன்னேறிய கேன் வில்லியம்ஸன் ஆறாம் இடத்திலும், நான்கு இடங்கள் முன்னேறிய டொம் ப்ளெண்டல் ஏழாம் இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் ரிசப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோ தலா இரண்டு இடங்கள் பின்சென்று முறையே எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடங்களில் உள்ளனர்.

9ம் இடத்திலிருந்த இலங்கை வீரர் திமும் கருணாரத்ன தற்போது 10ம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளார்.