மழைக்கு மத்தியிலும் பங்களாதேஷின் சாதனை

12 months ago
Cricket
(280 views)
aivarree.com

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டது.

எனினும் இதன்போது பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

ஒரு அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணியால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனை நேற்று படைக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் 6 விக்கட்டுகளை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 338 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ் அந்த சாதனையை அடுத்தப்போட்டியில் தகர்த்துள்ளது.

போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஸ்பிகர் ரஹ்மான், பங்களாதேஷ் அணி சார்பாக அதிகுறைந்த பந்துகளில் 100 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

அவர் 60 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், 63 பந்துகளில் 2009ம் ஆண்டு சக்கில் அல் ஹசன் படைத்த சாதனையை முறியடித்தார்.

அதேவேளை முஸ்பிக்கர் ரஹீம் 7000 ஓட்டங்களையும் கடந்தார்.

இதன்படி பங்களாதேஷ் சார்பில் 7000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது துடுப்பாட்டக்காரராக அவர் உள்ளார்.

சகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் முதல் இரண்டு வீரர்களாவர்.

மேலும் தமது 9வது ஒருநாள் சதத்தைப் பூர்த்திச் செய்த முஸ்பிக்கர், பங்களாதேஷ் சார்பாக அதிக சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை சக்கிப் அல் ஹசனுடன் பகிர்ந்துக் கொண்டார்.

முதல் இடத்தில் தமிம் இக்பால் 14 சதங்களுடன் உள்ளார்.

அதேநேரம் முஸ்பிக்கர் ரஹீம், 34ஆவது ஓவரிலேயே துடுப்பாட ஆரம்பித்து சதத்தைப் பூர்த்திச் செய்தமை குறிப்பிடத்தக்கது.