போர்ச்சுகலுக்காக மீண்டும் விளையாடும் ரொனால்டோ | அடுத்த உலகக்கிண்ணத்தை இலக்கு வைக்கிறாரா?

1 year ago
Football
(355 views)
aivarree.com

கடந்த ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக்கிண்ண காற்பந்தாட்டத் தொடரில், மொரோக்கோவுக்கு எதிரான நொக்கவுட் போட்டியில் அதிர்ச்சிகரமாக தோற்ற போர்ச்சுகல் வெளியேறியது.

இந்த போட்டியின் போது அணித்தலைவர் க்றிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முதலில் விளையாட அனுமதிக்கப்படாமை குறித்து அப்போது போர்ச்சுகலுக்கு முகாமையாளராக இருந்த ஃபெர்ணாண்டோ சந்தோஸ் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.

போர்ச்சுகலுக்கு முகாமையாளராக புதியவா ரொபேர்டோ மார்டினிஸ் பதவியேற்றுள்ளார்.

உலகக்கிண்ண தொடரில் தமக்கு ஏற்பட்ட நிலைமையை அடுத்து க்றிஸ்டியானோ ரொணால்டோ மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெளிவில்லாமல் இருந்தது.

எனினும் தற்போது அவர் மீண்டும் போர்ச்சுகல் அணியில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.
புதிய முகாமையாளரின் கீழ் ரொனால்டோ பயிற்சிகளை தொடங்கவுள்ளார்.

எனினும் அவர் உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடுவாரா என்பதில் இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் ஐரோப்பிய அணியான லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக யூரோகிண்ண தகுதிகாண் போட்டியில் எதிர்வரும் 24ம் திகதி விளையாடுவார் என்ற தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சவுதி அரேபியான் அல் நஸ்ர் கழகத்துக்காக விளையாடி வரும் 38 வயதான ரொனால்டோ, தாம் விளையாடிய 9 போட்டிகளில் 8 கோல்களை போட்டுள்ளார்.