பெண்கள் ப்ரீமியர் லீக் தொடரில் முதலாவது 5 விக்கட்டுகளை வீழ்த்திய தாரா

1 year ago
Cricket
(244 views)
aivarree.com

ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. 

அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் தாரா நோரிஸ் கேப்பிட்டல்ஸுக்கான தனது முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

24 வயதான அவர், எலிஸ் பெர்ரி, திஷா கசட், ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா மற்றும் ஹீதர் நைட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பெண்கள் ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு வீரரால் பெறப்படும் முதலாவது 5 விக்கட் இதுவாகும். 

ஆண்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இறுதி பதினொன்றில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டாலும், பெண்கள் போட்டியில் மேலதிக விதி உள்ளது.

“ஒரு அணியில் அதிகபட்சமாக ஐந்து வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களில் நான்கு பேர் முழுமையான கிரிக்கட் உறுப்புரிமை பெற்ற நாடுகளிலிருந்தும், ஐந்தாவது அசோசியேட் உறுப்பு நாட்டிலிருந்தும் இணைக்கலாம்.

சுவாரஸ்யமாக, ஏலத்தின் போது வேறு எந்த அணியும் ஒரு அசோசியேட் வீரரையும் தேர்வு செய்யவில்லை.

டெல்லி கெப்பிடல்ஸ் மட்டுமே அமெரிக்க வீராங்கனை தாராவை இணைத்திருந்த நிலையில், அதன் பலனை இன்று அடைந்தது. 

அதே நேரம் இந்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் 60 ஓட்டங்களால் வென்றது.