பாகிஸ்தான் கிரிக்கட் சபைத் தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கம்

1 year ago
Cricket
(398 views)
aivarree.com

பாகிஸ்தான் கிpக்கட் சபையின் தலைவராக 15 மாதங்கள் பதிவி வகித்து வந்த முன்னாள் கிரிக்கட் வீரர் ரமீஸ் ராஜா பதவி நீக்கப்பட்டுள்ளார்.
அந்த நாட்டின் பிரதமரும், கிரிக்கட் சபையின் போசகருமான சபாஸ் சரீப் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு அமைச்சரவை அனுமதிக்கு உட்படுத்தப்படும்.
ரமீஸ் ராஜாவை பதவி நீக்கிய அவர், அடுத்த நான்கு மாதங்களுக்கு பாகிஸ்தானின் கிரிக்கட் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, நஜம் சேதி தலைமையிலா 14 பேர் கொண்ட இடைக்கால குழு ஒன்றை நியமித்துள்ளார்.

ரமீஸ் ராஜா, முன்னாள் பிரதமர் இம்ரான் கானினால் நியமிக்க்பபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.