தசுன் ஷானகவுக்கு சத்திரசிகிச்சை

1 year ago
Cricket
(389 views)
aivarree.com

இலங்கை மற்றும் தம்புள்ளை ஓரா அணிகளின் தலைவர் தசுன் ஷானக விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டி ஃபெல்கன்ஸுக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பு செய்யும் போது ஷானகவின் வலது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை, பெரிய காயம் எதுவும் இல்லை என்று முன்னர்  கூறப்பட்டது.

ஆனால் இது அவரது பழைய எலும்பு முறிவில் ஏற்பட்ட காயம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டது என அணியின் மருத்துவர் மைத்திரி குணசேகர தெரிவித்துள்ளார்.