டெஸ்ட் சாம்பியன்சிப் – புள்ளிப்பட்டியலில் பின்னால் சென்ற இலங்கை

1 year ago
Cricket
(377 views)
aivarree.com

2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பருவத்துக்கான தரநிலைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான இறுதி போட்டியுடன் இந்த பருவத்துக்கான டெஸ்ட் சாம்பியன்ஸிப் நிறைவடைகிறது.

வெலிங்டனில் திங்கட்கிழமை நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது டெஸ்டின் நான்காவது நாளில் இலங்கை அணி தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.
அத்துடன் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு இடத்தை இழந்தன.

இறுதி போட்டியில் மோதவுள்ள அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.

தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

நியூசிலாந்திடம் இலங்கை 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தால், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்க வாய்ப்பிருந்தது.

எனினும் இலங்கை அணி அதனைத் தவறவிட்டது.

இதனால் இலங்கை சாம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.