டெல்லி அணியின் புதிய தலைவராக வோர்னர்

1 year ago
Cricket
(298 views)
aivarree.com

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைவராக டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் தலைவர் ரிஷப் பாண்ட் காயமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக 2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை டேவிட் வோர்னர் வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி அன்று உத்தரகாண்டில் இடம்பெற்ற கார் விபத்தின் போது படுகாயமடைந்த ரிஷப் பாண்ட் சிகிச்சைகளின் பின்னர் தற்சமயம் ஓய்வு பெற்று வருகிறார்.

அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எவ்வாறெனினும் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளின் போது அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், 2009 மற்றும் 2013 க்கு இடையில் அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக வோர்னர் விளையாடியுள்ளார்.

வோர்னர் பின்னர் 2014 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார் மற்றும் ஒரு வருடத்துக்கு பின்னர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 2016 ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றது.

2022 இல் ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட வோர்னர், ஐந்து அரைசதங்கள் அடங்கலாக 432 ஓட்டங்களை 48 சாரசரி மற்றும் 150.52 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.