சூரியகுமார் யாதவுக்கு ஆரோன் ஃபின்ச் வழங்கும் அறிவுரை

1 year ago
Cricket
(388 views)
aivarree.com

இந்திய துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்னிங்ஸின் முதல் சில பந்துகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூரியகுமார் யாதவ் கடினமான நெருக்கடியை சந்தித்துள்ளார்.

அவர் தனது இன்னிங்ஸின் முதல் பந்தில் சீமர் மிட்செல் ஸ்டார்க்கால் இரண்டு முறை ஆட்டமிழந்தார்.

இதன் விளைவாக இரண்டு போட்டிகளிலும் ஓட்டங்கள் எதனையும் அவர் பெறவில்லை.

மிட்செல் ஸ்டார்க்கிடம் இருந்து சூர்யகுமார் இரண்டு சிறப்பான பந்துகளை எதிர்கொண்டார்.

ஆனால் அவர் எங்கு பந்து வீசியிருப்பார் என்பது அவருக்குத் தெரியும்.

முதல் இரண்டு பந்துகளில் அதைவிடக் கூர்மையாக இருந்திருக்க வேண்டும்’ என்று ஃபின்ச், ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியுள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில், தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதால் அவர் ஏமாற்றமடைவார் என்றும் ஃபின்ச் மேலும் கூறினார்.

‘சுப்மான் கில் ஒருசில தளர்வான ஷாட்களை விளையாடினார். இதனால் குறிப்பாக அவர் நல்ல ஃபார்மில் இருந்து தற்போது இப்படி செயற்படுவதை அவரை ஏமாற்றமடையச் செய்யும் என்று நான் நினைக்கிறேன். சிறந்த பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்காரராக ஒருவர் ஆட்டமிழந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஒருவர் நல்ல ஃபார்மில் இருக்கும்போது மோசமான பந்து ஒன்றில் ஆட்டமிழந்து வெளியேறும்போது, மிகவும் ஏமாற்றமாக இருக்கும்’ ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி சென்னையில் புதன்கிழமை விளையாடுகிறது.