சிறிலங்கா கிரிக்கட் | விளையாட்டுத்துறை அமைச்சர் உச்ச நீதிமன்றுக்கு கொடுத்த வாக்குறுதி

1 year ago
Cricket
(268 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்திரேலியா சென்று 20க்கு20 உலக்கிண்ணத் தொடரில் விளையாடிய சமயத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்ட மா அதிபர் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.

இந்த அறிக்கை தற்போது கணக்காய்வாளர் நாயகத்திடம் தடயவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை என்று, உச்ச நீதிமன்றில் இடம்பெற்ற இதுதொடர்பான வழக்கொன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க உறுதியளித்துள்ளார்.

சட்டமா அதிபரின் பரிந்துரைகள் அடிப்படையில் தேசிய கிரிக்கட் அணித் தேர்வுக்குழுவை கலைக்கவிருப்பதாகவும், புதிய உறுப்பினர்களைக் கொண்டு தேர்வுக் குழு நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.