சாம் கரனுக்கு அபராதம்

1 year ago
Cricket
(253 views)
aivarree.com

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் கரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சமீபத்திய (29) போட்டியில், ஒரு வீரரை ஆட்டமிழக்கச் செய்த போது மற்றொரு வீரருக்கு எரிச்சல் அல்லது மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக கரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டார்.

சாம் கரனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கரன் மீது ஐசிசி ஒரு கருப்பு புள்ளியையும் சேர்த்துள்ளது.

எனினும், சாம் கரன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 24 மாதங்களில் கரன்; செய்த முதல் குற்றம் இதுவாகும்.

போட்டியின் 28வது ஓவரில் தென்னாப்பிரிக்க துடுப்பாட்டக்காரர் டெம்பா பௌமாவை ஆட்டமிழக்கச் செய்த பிறகு சாம் கரனின் மிகையான கொண்டாட்டம் இந்த அபராதத்துக்கு வழிவகுத்தது.