கிட்டார் மீட்டும் தோனி | வைரலாகும் வீடியோ

1 year ago
Cricket
(344 views)
aivarree.com

இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி கைகளில் கிட்டாருடன் ரொக் ஸ்டார் போன்று காட்சியளிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 31 அன்று நடைபெறும்.

ஐ.பி.எல். தொடருக்கான ஆயத்தங்களை தோனி தலைமையிலான நான்கு முறை சம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சிதம்பரம் மைதானத்தில் முன்னெடுத்து வருகின்றது.

தொடருக்கான ஆயத்தங்களின் போது வீரர்கள் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

அவ்வாறு வெளியானதோர் காணொளி, முன்னாள் இந்திய அணித் தலைவர் தோனியின் முற்றிலும் மாறுபட்ட பக்கத்தை வெளிக்காட்டியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பர படப்பிடிப்பு தொடர்பான அண்மைய காணொளியில், தோனி கைகளில் கிட்டாருடன் ரொக் ஸ்டார் போன்று கிட்டார் வாசிப்பதை காண முடிந்தது.

அந்த காணொளியில் சென்னையின் ஏனைய வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் மற்றும் ஷிவம் டூபே ஆகியோரும் தோன்றியுள்ளனர்.

தோனியின் இவ்வாறானதொரு தோற்றத்தைப் பார்த்திடாத அவரது ரசிகர்கள் தற்சமயம் அந்த காணொளியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டாடி வருகின்றனர்.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் தோனி தனது முதல் ஐ.பி.எல். போட்டியைச் சென்னையில் விளையாடுகிறார்.