காயமடைந்தார் கிலியன் எம்பாபே

1 year ago
Football
(277 views)
aivarree.com

கிலியன் எம்பாப்பே தொடையில் ஏற்பட்ட காயத்தால் மூன்று வாரங்கள் ஓய்வுபெற அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

இதனால் அவர் ஃபெப்ரவரி 14 அன்று பேயர்ன் முனிச்சிற்கு எதிரான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனின் சாம்பியன்ஸ் லீக் கடைசி-16 சுற்றின் முதல் கட்ட போட்டியில் விளையாட முடியாத நிலை நேரிடும் என்று அவரது கிளப் வியாழக்கிழமை அறிவித்தது.

லீக் 1 இல் Montpellier இல் புதன்கிழமை நடந்த போட்டியில் பிஎஸ்ஜி 3-1 வெற்றியீட்டியது. 

இதில் முதல் பாதியில் பிரான்ஸ் நட்சத்திரம் எம்பாப்பே காயமடைந்தார்.

PSG பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் இதுபற்றி கூறும் போது, ஆரம்பத்தில் எம்பாப்பே  தசை பிடிப்பால் பாதிக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், அவரது  முழங்காலின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டதாக கூறினார். 

ஆனால் சோதனைகள் காயத்தின் உண்மையான பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.

சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, கிலியன் எம்பாப்பேவை 3 வாரங்கள் ஓய்வெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.